தெலுங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சரியா

தெலுங்கானாவில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டர் குறித்து பலதரப்பட்ட வாதங்கள் எழுந்து வருகின்றன. சிலர் இதை சரி என்றும், சிலர் இதை தவறு என்றும் வாதிட்டு வருகின்றன


தவறோ, சரியோ என்று இங்கு வாதிடுவதற்கு ஒன்றும் இல்லை. நடந்த சம்பவம் அதுமாதிரியான சம்பவம். பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் கவலைக்கு ஆறுதல் மாதிரி இந்த சம்பவம் நடந்துள்ளது



தெலுங்கானாவில் கடந்த வாரம் மருத்துவரை பார்க்கச் சென்ற பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.



குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி சட்டத்தால் தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால், நீதியின் மூலம், சட்டத்தின் மூலம் தண்டனை கிடைப்பதற்கு அதிக நாட்கள் பிடிக்கும். ஆனால், சட்டத்தின் வழியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கிடைக்க காலதாமதம் ஏற்படும். தாமதமாக கிடைக்கும் தண்டனை, காலம் தாழ்த்திக் கொடுக்கப்படும் தண்டனையாகவே கருதப்படும்.